×

1,250 கிராம கோயில்களின் திருப்பணிக்காக 25 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:2021-2022ம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பின் படி கிராமப்புற கோயில் திருப்பணி திட்டத்தின் படி கிராமப்புறப்பகுதியில் அமைந்துள்ள 1,250 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ₹2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக, ₹25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, கோயில் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் படி 1,250 கோயில்கள் இறுதி செய்யப்பட்டு கோயில் பெயர் விவரப்பட்டியல் இத்துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1250 கோயில்களின் திருப்பணிக்கு இந்து சமய அறக்கட்டளை சட்டம் 1959 மற்றும் திருத்திய சட்டம் பிரிவு 97ன் கீழ் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்து சமய அறக்கொடைகள் பொது நல நிதியில் இருந்து ₹25 கோடி வழங்க அனைத்து உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, இறுதி செய்யப்பட்டுள்ள 1,250 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுநர் குழு கருத்துரு மற்றும் மண்டல ஸ்தபதி கருத்துருவுடன் மண்டல அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்குட்படுத்தி அதனை தொடர்ந்து, மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெற்று பொதுநல நிதியின் மூலம் மண்டல இணை ஆணையர் நிலையில் கோயில் திருப்பணி மேற்கொள்வதற்கான மதிப்பீட்டிற்கு மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளவும், விரைவில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்தவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. …

The post 1,250 கிராம கோயில்களின் திருப்பணிக்காக 25 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Hindu Religious Endowments ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...