×

பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுபோக்கு

பூந்தமல்லி:  திருவேற்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22). இவரது நண்பர் பரத்குமார் (20). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு சிவன் கோயில் தெருவில் ஒரு தனியார் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டனர். பின்னர் வீடு திரும்பிய இருவருக்கும் கடும் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர்.இதுகுறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் ஸ்ரீதர், பரத்குமார் ஆகிய இருவரும் புகாரளித்தனர். அப்புகாரில் திருவேற்காடு, சிவன் கோயில் தெருவில் ஒரு தனியார் அசைவ ஓட்டலில் தரமான உணவு வழங்கப்படுவது இல்லை. எனவே, அந்த ஓட்டலை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தினர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்….

The post பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுபோக்கு appeared first on Dinakaran.

Tags : Sridhar ,Tiruvekat ,Bharatkumar ,
× RELATED மார்க்சிஸ்ட் பயிற்சி வகுப்பு