×

அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன்

சென்னை: ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கும் படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். பீஸ்ட், லியோ, கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, சலார் உள்பட பல படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்தவர்கள் அன்பறிவு சகோதரர்கள். இவர்கள் முதல்முறையாக ஒரு படம் இயக்கப்போவதாக அறிவித்தனர். இந்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் இவர்கள் இயக்குனர்களாக அறிமுகமாவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கமல்ஹாசனின் 237வது படமாக இது தயாராகிறது. இதனால் இதுவே தற்காலிக பெயராக வைக்கப்பட்டுள்ளது. தற்போது மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் கமல் நடிக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகு இதன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். அடுத்த ஆண்டில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamalhassan ,Chennai ,Andaryu ,Kamal Hassan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்