×

அசானி புயல் கரையைக் கடந்தது தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும்

சென்னை: ஆந்திர கடலோரத்தில் நெருங்கிய ‘அசானி’ புயல் நேற்று மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இருப்பினும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் அதைஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் இன்று  பலத்த காற்று மணிக்கு 50 கிமீ முதல் 60கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …

The post அசானி புயல் கரையைக் கடந்தது தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Cyclone ,Asani ,Andhra coast ,Masulipatnam ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...