×

மொனாக்கோ கப்பல் போட்டியில் பங்கேற்கும் கோவை கப்பல்!: தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் முயற்சிக்கு வெற்றி..!!

கோவை: இந்தியாவில் இருந்து முதல்முறையாக மொனாக்கோவில் நடைபெறும் போட்டியில் கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய பேட்டரியில் இயங்கும் கப்பல் பங்கேற்கிறது. அருகில் கடல் இல்லாத நிலையிலும், 3 மாதங்கள் சவால்களை எதிர்கொண்டு மாணவர்கள் கப்பலை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். மொனாக்கோ கப்பல்கள் மீது ஆர்வம் அதிகம் கொண்ட நாடு. பல வகையான கப்பல் சார்ந்த போட்டிகள், கண்டுபிடிப்புகள், அங்கு அதிகம் நடைபெறுவது வாடிக்கை. அங்கு ஜூலை மாதம் நடக்கவிருக்கும் கப்பல் சார்ந்த போட்டியில் பங்கேற்க முதல்முறையாக இந்தியா சார்பில் கோவையில் இருந்து மாணவர் குழு மொனாக்கோ சென்றிருக்கிறது. இவர்கள் உருவாக்கிய யாலி என்ற பேட்டரியில் இயங்கும் கப்பல், அங்கு நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க இருப்பதே காரணம். கப்பல் எவ்வளவு தூரம், எவ்வளவு வேகமாக வளைந்து, எவ்வளவு மணி நேரம் செல்கிறது என்பது தான் போட்டியின் முக்கிய அம்சம். ஒரு நாட்டிற்கு ஒரு குழுவை மட்டுமே மொனாக்கோ, போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கிறது. அந்த வகையில் மொனாக்கோ கப்பல் போட்டிக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஐஐடி, என்ஐடி போன்ற நிறுவனங்கள் மட்டும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கோவையில் இருந்து இதுபோன்ற சர்வதேச போட்டியில் பங்கேற்க செல்வது பெருமை அளிப்பதாக கப்பலை வடிவமைத்த மாணவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். மேலும் மொனாக்கோ கப்பல் போட்டியில் கலந்துகொள்வதை தங்கள் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக மீனவர்களின் படகில் உள்ள மோட்டாரில் சிறிது மாற்றம் செய்து மின்சார பேட்டரியில் இயங்கும் வசதியை கொண்டுவர முயற்சி செய்து வருவதாக கோவை பொறியியல் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை நடைமுறைப்படுத்தினால் தரைவழி போக்குவரத்தை போன்று நீர்வழி போக்குவரத்திலும் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

The post மொனாக்கோ கப்பல் போட்டியில் பங்கேற்கும் கோவை கப்பல்!: தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் முயற்சிக்கு வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Monaco ,India ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...