×

குஜிலியம்பாறையில் சேறும், சகதியுமான மண் சாலை-சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் வேளாண்மை விரிவாக்கம் மையத்திற்கு செல்லும் மண் சாலை சேறும், சகதியாக உள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெரும் வகையில், குஜிலியம்பாறையில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. குஜிலியம்பாறை மயானத்தை ஒட்டியவாறு இந்த வேளாண்மை அலுவலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்ந்த திட்டங்களை தெரிந்து கொள்ளவும், விவசாயம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் இந்த வேளாண்மை அலுவலகத்திற்கு நாள்தோறும் வந்து செல்வர். இந்நிலையில் கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த மழையால், வேளாண்மை அலுவலகம் செல்லும் மண்சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இவ்வழித்தடம் செல்லும் பாதையில் இருபுறமும் முட்புதர்கள் மண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேறும், சகதியுமாக இச்சாலையில் மழைநீர் தேங்காதவாறு சீரமைப்பதுடன், இருபுறம் உள்ள முட்புதர்களை அகற்றவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post குஜிலியம்பாறையில் சேறும், சகதியுமான மண் சாலை-சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kujiliambarai ,Kujiliamparai ,Agricultural Extension Center ,Kujiliamparai… ,Dinakaran ,
× RELATED குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59...