×

நடிகை தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்; 6 வாரத்தில் பதில் அளிக்க தலைமை நீதிபதி உத்தரவு

டெல்லி: நடிகை தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணிகண்டனின் ஜாமீனை  ரத்து செய்யக் கோரும் வழக்கில் தமிழக காவல்துறையும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 6 வாரத்தில் பதில் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மணிகண்டன் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை புகார் அளித்திருந்தார். தங்களது அந்தரங்க புகைப்படங்களில் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் மணிகண்டன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என நடிகை போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடைப்படிடையில்   சென்னை அடையாறு மகளிர் போலீஸ் மணிகண்டன் மீது 8 பிரிவில் வழக்கு பதிவு செய்தது. எனவே கடந்த வருடம் ஜூன் 20-ம் தேதி தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். எனவே இந்த  வழக்கில் சென்னை உயர்நீதிமன்றனம் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மணிகண்டன் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகை மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்கவும் நடிகை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். உச்சநீதிமன்ற தரைமை நீதிபதி  என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. …

The post நடிகை தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்; 6 வாரத்தில் பதில் அளிக்க தலைமை நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Manigantan ,Chief Justice ,Delhi ,Manikandan ,Manicandon ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...