×

ராஜபாளையத்தில் குடியிருப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வாறுகால் வசதி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. மேலும் கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் ஆங்காங்கே வெற்றிடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ராஜபாளையத்தில் குடியிருப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Chenbagathoppu ,Karisalkulam Panchayat ,
× RELATED ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்