×

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதனை..!!

ஸ்ரீஹரிகோட்டா: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் பூஸ்டர் சோதனை  நடத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி எம்.கே.3 ரக ராக்கெட்டில் பொருத்துவதற்கான ஹெச்.எஸ்.200 ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. சோதனையின் போது 700 அளவுகோள்கள் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த HS200 ராக்கெட் பூஸ்டரில் 203 டன் திட எரிபொருள் ஏற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 4,000 கிலோ எடை செயற்கைகோள் செலுத்தும் வாகனம் எல்.வி.எம்.-ன் முதல் நிலையில் எஸ்.200 மோட்டார் பொருத்தப்படும். இந்த வகை ராக்கெட் பூஸ்டர்களில் உலகிலேயே 2வது பெரிய ராக்கெட் பூஸ்டர் இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், முதல் நிலை திட எரிபொருளால் இயக்கப்படுகிறது, இரண்டாவது திரவ எரிபொருள் மற்றும் மூன்றாவது கிரையோஜெனிக் நிலை, திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜனால் இயக்கப்படுகிறது….

The post மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Isra ,Kaganyan ,Srihrikota ,Sadeesh ,Srihrikotta ,ISRO ,
× RELATED ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி