×

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 5 சவரன், 1 கிலோ வெள்ளி திருட்டு

திருவள்ளூர்:  கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூர் சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் பிரபு (30). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்தியபிரியா (25). இவர்கள் கடந்த 7ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி கோயிலுக்கு சென்றனர். நேற்றுமுன்தினம் காலை அவர்களது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது பார்த்து அக்கம்பக்கத்தினர் செல்போனில் சத்யபிரியாவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக வீட்டுக்கு வந்தனர். பீரோவில் வைத்திருந்த கம்மல், மூக்குத்தி, வளையல், செயின் உள்பட 5 சவரன் நகைகளும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளைப்போனது தெரியவந்தது.இதுபற்றி சத்தியபிரியா கொடுத்துள்ள புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை சேகரித்து சென்றனர். மோப்ப நாய் வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது….

The post தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 5 சவரன், 1 கிலோ வெள்ளி திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Prabhu ,Pannur Susaiyappar Street, Kadambathur Union ,
× RELATED முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு