- பீட்டர் ஹெய்ன்
- சென்னை
- ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் ஜே. எ
- பஷீர்
- எம்.டி.
- திரையரங்குகளில்
- ஏஎம் சௌத்ரி
- மா. வெட்ரி
- பீட்டர் ஹெய்ன்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் ஜெ.எம். பஷீர், எம்.டி சினிமாஸ் ஏ.எம் சௌத்ரி தயாரிக்க, மா.வெற்றி இயக்கத்தில் பான் இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகும் படத்தில், ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.விரைவில் துவங்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பை வெளியிடும் விதமாகப் படக்குழுவினர் மீடியாவை சந்தித்தனர். இதில் பீட்டர் ஹெய்ன் பேசியது: வெற்றி முதலில் ஒரு ஐடியாவாகத்தான் இதைச் சொன்னார், யார் ஹீரோ என்றேன் நீங்கள் தான் நடிக்கனும் என்றார். நான் தயங்கினேன். இந்தப்படத்திற்கு நீங்கள் தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் எத்தனை ஹீரோக்களுக்கு ஸ்டன்ட் சொல்லித் தந்திருக்கிறீர்கள் உங்களை மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார். எனக்கும் சரியென்று தோன்றியது. முதலில் கதையில் நிறைய மாற்றங்கள் செய்தோம். நான் இதுவரை செய்த வேலைகளில் நேர்மையாக இருந்திருக்கிறேன். இந்தப்படத்தில் நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றுவேன். சௌத்ரி சார், பஷீர் இருவரும் என்னை முழுமையாக நம்பி வந்துள்ளனர். இப்படத்தில் காட்டுவாசியாக நடிக்கிறேன்.
The post காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.