×

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்தார் அமலா பால்

சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்தவர், அமலா பால் (32). கோலிவுட் இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்த அவர், கடந்த 2014ல் அவரை திருமணம் செய்துகொண்டார். அதற்குப் பிறகும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், ஏ.எல்.விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி அமலா பால் தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மேலும், அன்று அவரது நெருங்கிய நண்பர் ஜெகத் தேசாய், தனது காதலை வெளிப்படுத்தி அவருக்கு மோதிரம் அணிவித்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அமலா பால், ஜெகத் தேசாய் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமாகி இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தங்கள் இனிமையான இல்லற வாழ்க்கையில் 3வது நபரை வரவேற்க தாங்கள் காத்திருப்பதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

The post திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்தார் அமலா பால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amala Paul ,CHENNAI ,Kollywood ,AL Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ் படங்கள் பாணியில் ஹாலிவுட் படம் ரீ-ரிலீஸ்