×

சென்னை ஐகோர்ட்டில் 9 நீதிபதிகள் நிரந்தரம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரம் செய்வதற்கு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020 டிசம்பர் 12ம் ேததி கூடுதல் நீதிபதிகளாக கோவிந்தராஜுலு, வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், சாத்தி குமார் சுகுமார குரூப், முரளி சங்கர் குப்புராஜா, மஞ்சுளா ராமராஜு நல்லையா, தமிழ்செல்வி, ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்துவரும் இவர்களின் 2 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இவர்களில் ஏ.ஏ.நக்கீரன் தவிர மற்ற 9 பேரையும் நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் மட்டும் 2022 டிசம்பர் 3ம் தேதி முதல் மேலும் ஒரு ஆண்டுக்கு கூடுதல் நீதிபதியாக பதவி வகிப்பார் என்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலை ஒன்றிய அரசு பரிசீலித்து நிரந்தர நீதிபதிகளுக்கான பதவி பிரமாணம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள 60 நீதிபதிகளில் 17 பேர் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வருகிறார்கள்….

The post சென்னை ஐகோர்ட்டில் 9 நீதிபதிகள் நிரந்தரம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Supreme Court Collegium ,Chennai ,Madras High Court.… ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...