×

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடத்தல் 2,750 கிலோ செம்மரக்கட்டைகளுடன் 7 பேர் கைது-திருப்பத்தூரை சேர்ந்தவர்கள்

சித்தூர் :  திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடத்தி வந்த 2,750 கிலோ செம்மரக்கட்டைகளுடன் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.சித்தூர் எஸ்பி ரிசாந்த் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி  மாவட்டம், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வருவதாக நேற்று முன்தினம் சித்தூர் ரூரல் சர்க்கிள் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் னிவாஸ் ரெட்டி, குடிபாலா சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சித்தூர்- ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் எம்.சி.ஆர் சர்க்கிள் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், காரை சோதனை செய்ததில் அதில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கார் மற்றும் மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவ்வழியாக வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்ததையடுத்து அதிலிருந்த 5 பேரை கைது செய்து 2,750 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம், மேலசிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி(44), ஜோலார்பேட்டையை சேர்ந்த முருகேசன்(50), ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(44), கொடுமாபல்லி கிராமத்தை சேர்ந்த ராமன்(27), கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழக்காடு கிராமத்தை சேர்ந்த குலஞ்ஜன்(36), வெங்கடேஷ்(37), கோவிந்தராஜ்(21) என தெரிந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது டிஎஸ்பி சுதாகர், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்பட ஏராளமான போலீசார் உடனிருந்தனர். …

The post திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடத்தல் 2,750 கிலோ செம்மரக்கட்டைகளுடன் 7 பேர் கைது-திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kaithu-Thirupathur ,Tirupati Seeshasalam Forest ,Chittoor ,Tirupati Seeshasalam ,Tirupattur district ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்