×

கீர்த்தி அறிமுகமாகும் ஒரு ரூபாய்

சென்னை: ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சிக்கும், நலனுக்கும் ஆட்சியாளர்கள் மட்டுமே பொறுப்பு அல்ல. நாம் ஒவ்வொருவரும் நல்ல மனதுடன் செயல்பட வேண்டும். ‘நமது ஊரின் நலன், நம் அனைவருடைய நலன்’ என்ற பொதுநல நோக்கத்துடன், ஒருமித்த கருத்துடன் இணைந்தால், நமக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே நல்வழி காட்டலாம் என்ற சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம், ‘ஒரு ரூபாய்’. எம்பிஏ புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ‘ஒரு மழை நான்கு சாரல்’, ‘குரு சுக்கிரன்’, ‘மவுன மழை’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகிகளில் ஒருவராக விருதுநகரைச் சேர்ந்த கீர்த்தி அறிமுகமாகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

The post கீர்த்தி அறிமுகமாகும் ஒரு ரூபாய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Keerthi ,CHENNAI ,Kollywood Images ,
× RELATED தமிழ் படங்கள் பாணியில் ஹாலிவுட் படம் ரீ-ரிலீஸ்