×

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை-மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

சத்தியமங்கலம் :  வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தெங்குமரஹாடா வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. மழையின் காரணமாக வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது மாயாற்றில் செந்நிற மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடா, அல்லி மாயாறு, மற்றும் கல்லாம்பாளையம் உள்ளிட்ட வன கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வனப்பகுதியில் உள்ள மாயாற்றை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பவானிசாகரிலிருந்து தெங்குமரஹாடா செல்லும் கரடுமுரடான மண் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. மாயாற்றில் செந்நிற மழை நீர் கரைபுரண்டு ஓடுவதால் பரிசலை இயக்க வேண்டாம் எனவும், ஆபத்தான வகையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டாம் என வனத்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்….

The post பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை-மாயாற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Sathyamangalam ,Asani ,Bay of Bengal ,Tamil Nadu ,Erode ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...