×

பொங்கலுக்கு 3 தமிழ் படங்கள் ரிலீஸ்

சென்னை: வரும் பொங்கல் பண்டிகைக்கு 3 படங்கள் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’, ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் மற்றும் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’ ஆகிய படங்கள் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். இதனால், ‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

The post பொங்கலுக்கு 3 தமிழ் படங்கள் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Pongal festival ,Dhanush ,Sivaraj Kumar ,Priyanka Arul Mohan ,Arun Matheswaran ,Sivakarthikeyan ,R. Ravikumar ,Aishwarya Rajinikanth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!