×

தனியார் கல்லூரி பேராசிரியர் பலி

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (44). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக வேலை செய்தார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சென்றார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே சரிந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த குரோம்பேட்டை போலீசார், அங்கு விரைந்து சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்….

The post தனியார் கல்லூரி பேராசிரியர் பலி appeared first on Dinakaran.

Tags : Gobinath ,Chengalpadu District ,Botteri ,
× RELATED கோயில் திருவிழா தொடர்பான தகராறில்...