×

ஹீரோயின் இல்லாத படம்

சென்னை: ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து, பொய்க்கால் குதிரை ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் தற்போது இயக்கி, நடித்து வரும் படம் ‘தி பாய்ஸ்’. ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த ஹர்ஷத், வினோத், ஷாரா, யுவராஜ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண் மற்றும் கவுதம் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் செந்தில்குமார் தயாரித்திருக்கிறார்.

படம் பற்றி சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறும்போது ‘‘5 இளைஞர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 5 பேரும் இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால், அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும் என்பதை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த படம் உருவாக்கப்படுகிறது. படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்தான்’’ என்றார்.

The post ஹீரோயின் இல்லாத படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Santhosh B ,Hara Hara Mahadevaki ,Urudu Kuttu Kuttu ,Ghajinikanth ,Second Kuttu ,Poikkal Khudu ,Jayakumar ,Harshad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...