×

ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறன் குழந்தையை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்த ஊழியர்கள்: ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை

ராஞ்சி:  ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறன் குழந்தையை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தது ெதாடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த பதிவில், ‘மாற்றுத்திறனாளி குழந்தை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாது என இண்டிகோ ஊழியர்கள் அறிவித்தனர். அவரால் மற்ற பயணிகளுக்கு ஆபத்து. அவர் பயணத்திற்கு தகுதியானவராக இருப்பதற்கு முன்பு, முதலில் அவர் சாதாரண மனிதரை போல ஆக வேண்டும். குடிபோதையில் உள்ளவர்கள் விமானத்தில் பயணம் செய்ய தகுதியற்றவர்கள். அதை போலவே இந்த பயணியும்’ என்று பதிவிடப்பட்டது. இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மே 7 அன்று மாற்றுத்திறன் கொண்ட குழந்தை ஒன்று தனது குடும்பத்தினருடன் விமானத்தில் ஏற முடியவில்லை. அவர் பீதியில் இருந்தார். கடைசி நிமிடம் வரை மைதான ஊழியர்கள் அவரை அமைதிபடுத்த முயற்சித்தும் பலனில்லை. அவர் பயத்தில் இருந்தார். ஆகவே, விமான நிறுவனம் அந்த குடும்பத்திற்கு ஒரு ஓட்டலில் தங்க வசதியை அளித்து அவர்களை வசதியாக தங்க செய்தது. இன்று காலை அந்த குடும்பம், அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி விமானத்தில் பயணித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு கண்டனத்திற்கு உள்ளான தகவல் பொய்’ என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று வெளியிட்ட பதிவில், ‘இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலையை யாரும் சந்திக்கக்கூடாது. இதுகுறித்து விசாரித்து வருகிறேன்; அதன்பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். மறுபுறம், இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக அதன் தலைவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். …

The post ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறன் குழந்தையை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்த ஊழியர்கள்: ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ranchi airport ,Union minister ,Ranchi ,Union ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...