×

இலங்கையில் ஊரடங்கு அமல்: கொழும்புவில் போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் அரசிற்கு எதிராக காலே முகத்திடலில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியதால் கொழும்புவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் பொதுமக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருமாதமாக நீடித்து வரும் போராட்டங்களை ஒடுக்க, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று பதவி விலகுவார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தி, ஒரு தரப்பினர் திடீரென போராட்டத்தில் குதித்தனர். பின்னர் காவல்துறையினர் விரட்டியடித்ததை அடுத்து, தொடர் போராட்டம் நடைபெற்று வரும் காலே முகத்திடலிற்கு சென்று, ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். காலே போராட்ட களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை ராஜபக்சே ஆதரவாளர்கள் பிடுங்கி எரிந்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தண்ணீர்களை பீச்சி அடித்தும் கும்பலை கலைக்க முற்பட்டதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. அப்போது காலே போராட்டக்களத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர். வன்முறை தாக்குதலில் போராட்டக்காரர்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீதான அரசு ஆதரவாளர்களின் தாக்குதலை அடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலே முகத்திடலில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.      …

The post இலங்கையில் ஊரடங்கு அமல்: கொழும்புவில் போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Rajapakse ,Colombo ,Sri Lanka ,Amal ,Dinakaran ,
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...