×

ராஜாக்கமங்கலம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் கிடந்த 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

ராஜாக்கமங்கலம்: ராஜாக்கமங்கலம் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்ததை தொடர்ந்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் அடுத்து மேல மாவிளை என்ற இடத்தில் ராஜாக்கமங்கலம் போலீசார் ரோந்துப் பணியில் சென்றபோது அங்குள்ள பாழடைந்த படிப்பகம் ஒன்றின் மேல் பகுதியில் ஒரு பார்சல் கிடந்தது. அந்த பார்சலை போலீசார் எடுத்து சோதனை செய்த போது அதில் 500 ஓலைப்பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக அது தயாரிக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஓலை பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஓலை பட்டாசுகளை தயாரித்தவர்கள் யார்? என்பது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த சில மாதங்கள் முன் ராஜாக்கமங்கலம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து நான்கு பேர் காயமடைந்த சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது….

The post ராஜாக்கமங்கலம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் கிடந்த 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rajakkamangalam ,Dinakaran ,
× RELATED அனைவருக்கும் பொருளாதாரம் சீராக பரிகாரம்