×

புளியந்தாங்கல் முத்தாலம்மன் கோயில் திருவிழா அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் புளியந்தாங்கல் கிராமம், ஏரிக்கோடியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்தனர். அப்போது காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும் அந்தரத்தில் பறந்து வந்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.  திருவிழாவையொட்டி நேற்றிரவு  முத்தாலம்மன் திருவீதி உலாவும், நாடகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மைதாரர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் பாபு, ரவி, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வார்டு கவுன்சிலர்கள் செல்வம், சுமதி, ஐயப்பன், ரம்யா எத்திராஜ், சிவா, வாலாஜா ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி பாண்டியன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரஸ்வதி மோகன்  மற்றும் ஏரிக்கோடி விழாக் குழுவினர்கள், கிராம மக்கள். இளைஞர்கள் என  திரளானோர் கலந்து கொண்டனர்….

The post புளியந்தாங்கல் முத்தாலம்மன் கோயில் திருவிழா அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pulianthangal Muthalamman temple festival ,Ranipet ,Sri Muthalamman temple festival ,Pulianthangal ,Aerikodi, Ranipet district ,Aman ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...