×

‘அயன்’ சினிமா பட பாணியில் போதைப்பொருளை மாத்திரையாக விழுங்கி கடத்திய உகாண்டா பெண்

பீளமேடு: சார்ஜாவிலிருந்து நேற்று முன்தினம் காலை கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ.)அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உகாண்டா நாட்டிலிருந்து வந்த 30 வயது பெண் உட்கார முடியாமல் அசகவுரியமாக காணப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மதியம் சேர்த்தனர். விசாரணையில் அந்த பெண் உகண்டா நாட்டை சேர்ந்த சான்ட்ரா நான்டெசா (35) என்பதும், ரெடிமேடு துணிகள் விற்பனையாளர் என்பதும் தெரியவந்தது. நேற்று காலை அந்த பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய மாத்திரைகள் வெளியேறியது. அந்த மாத்திரைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த மாத்திரைகளில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது என்ன போதைப்பொருள் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த போதை மாத்திரைகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை அவரிடமிருந்து 40க்கும் மேற்பட்ட மாத்திரைகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வயிற்றுக்குள் மேலும் பல மாத்திரைகள் இருப்பதால் அவற்றை மீட்கும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி 24 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாத்திரைகள் அனைத்தும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவில்தான் என்ன போதை மருந்து? எடை எவ்வளவு? என்பதும் தெரியவரும். சூர்யா நடித்த ‘‘அயன்’’ சினிமா படத்தில் போதை மருந்தை சிறிய  பிளாஸ்டிக் பையில் அடைத்து விழுங்கி கடத்துவதுபோன்ற காட்சி வரும். அதுபோன்று இந்த சம்பவம் கோவையில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. …

The post ‘அயன்’ சினிமா பட பாணியில் போதைப்பொருளை மாத்திரையாக விழுங்கி கடத்திய உகாண்டா பெண் appeared first on Dinakaran.

Tags : Air Arabia ,Coimbatore ,Sharjah ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...