×

நடுக்கடலில் உருவான படம்

சென்னை: முதன் முதலாக தமிழ் படம் ஒன்று நடுக்கடலில் தயாராகி உள்ளது. இம்சை அரசன் 23-ம் புலிகேசி, புலி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன் தற்போது இயக்கி உள்ள புதிய படம் ‘போட்’. மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ்’ சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ளார். யோகி பாபு, கௌரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா, கொள்ளபுலி லீலா, அக்ஷதா தாஸ், நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. 1940களில் இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் உலக போரின் ஒரு பகுதியாக ஜப்பான் நாடு சென்னை மீது குண்டு வீசியது. அதற்கு பயந்த 10 பேர் ஒரு படகில் வங்க கடலுக்குள் செல்கிறார்கள். இந்த பயணத்தின்போது படகில் ஏற்பட்ட விரிசலால் மூழ்க ஆரம்பிக்கிறது. இதனால் 7 பேர் மட்டுமே படகில் இருக்க முடியும் என்கிற சூழ்நிலை உருவாகிறது.

படகுக்கு வெளியே சுறா மீன் ஒன்று சுற்றி கொண்டிருக்கிறது. அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. ஆபத்து வருகிறபோது மக்கள் எப்படி சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். உயிருக்கு பயந்து மனிதாபிமானத்தை எப்படி இழக்கிறார்கள் என்பதோடு உலகில் நடக்கும் யுத்தங்களின் வலியையும் பேசுகிற படமாக உருவாகியுள்ளது. மொத்த படப்பிடிப்பும் குலசேகரபட்டினம் கடலில் படமாக்கப்பட்டுள்ளது.

The post நடுக்கடலில் உருவான படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mediterranean ,Chennai ,Simbudevan ,Imsai Arasan ,Irukkottai Muratu Singham ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...