×

முன்னாள் எம்எல்ஏ பயோபிக்கில் சமுத்திரக்கனி

ஐதராபாத்: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டைரக்‌ஷன், தயாரிப்பு, நடிப்பு என்று பிசியாக இருக்கும் சமுத்திரக்கனி, தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’ ஆகிய பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் பயோபிக்கில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநில முன்னாள் எம்எல்ஏ கும்மாடி நர்சய்யா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதிய ஜனநாயகம் கட்சியைச் சேர்ந்தவர்.

எல்லண்டு தொகுதியில் (ஒருங்கிணைந்த ஆந்திராவில்) சுயேச்சையாகப் போட்டியிட்டு 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். ‘மக்களின் மனிதன்’ என்று புகழப்படும் அவருக்கு சொந்த வீடு கிடையாது. எம்எல்ஏ ஆன பிறகு கூட சைக்கிள் மற்றும் பஸ்சிலேயே பயணம் செய்து வந்துள்ளார். தற்போது அவரது வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் தெலுங்கு படத்தில், அவரது வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக தெலுங்கு படவுலகில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post முன்னாள் எம்எல்ஏ பயோபிக்கில் சமுத்திரக்கனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samudhirakani ,MLA ,Hyderabad ,Samuthirakani ,Shankar ,Communist Party ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘ராமம் ராகவம்’ படத்துக்கு டப்பிங்...