×

சப்தம் படத்தில் பேய் ஆய்வாளர் வேடத்தில் ஆதி

சென்னை: ஆதியுடன் நந்தா நடித்த ‘ஈரம்’, நகுல் நடித்த ‘வல்லினம்’, அருள்நிதி நடித்த ‘ஆறாது சினம்’, அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’, ‘பார்டர்’ ஆகிய திரைப்படங்களையும், அருண் விஜய் நடித்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடரையும் இயக்கியவர், அறிவழகன். தற்போது அவர் ‘ஈரம்’ படத்துக்குப் பிறகு ஆதி, இசை அமைப்பாளர் தமன் ஆகியோருடன் மீண்டும் இணைந்துள்ள படம், ‘சப்தம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், நேற்று ஆதியின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. படம் குறித்து நிருபர்களிடம் அறிவழகன் கூறியதாவது:

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை தொடர்ந்து 4வது முறையாக நானும், தமனும் இணைந்துள்ளோம். ஆதி மனைவியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர். ‘மகாமுனி’ அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆல்பா பிரேம்ஸ் சார்பில் நானும், 7ஜி பிலிம்ஸ் சார்பில் சிவாவும் இணைந்து தயாரித்துள்ளோம்.

மூணாறு, மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இதே டைட்டிலுடன் படத்தை திரையிடுகிறோம். பேய் புலனாய்வாளர் கேரக்டரில் ஆதி நடித்துள்ளார். இவ்வுலகில் ஆவி இருக்கிறதா, இல்லையா என்பதை அறிவியல் ரீதியாக அணுகும் கதை இது. ‘ஈரம்’ படத்தில் தண்ணீரில் இருந்து பேய் உருவாகும். இப்படத்தில் சப்தத்துக்கும், பேய்க்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லியிருக்கிறோம் என்றார்.

The post சப்தம் படத்தில் பேய் ஆய்வாளர் வேடத்தில் ஆதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aadi ,Saptham ,CHENNAI ,Adiyuda Nanda ,Nakul ,Arun Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...