×

45 வருடங்களுக்கு பிறகு தமிழில் அறிமுகமாகும் மலையாள இசை அமைப்பாளர் ஔசெப்பச்சன்

சென்னை: 1978ம் ஆண்டு ‘ஆரவாரம்’ என்ற மலையாள படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஒளசெப்பச்சன். 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 2007ம் ஆண்டு ‘ஒரே கடல்’ என்ற படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதையும், மாநில அரசு விருதையும் பெற்றார். பின்னணி இசைக்கு புகழ்பெற்ற ஔசெப்பச்சன் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை மட்டும் அமைத்துள்ளார். தற்போது முதன் முறையாக ‘ரூட் நம்பர் 17’ என்ற தமிழ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தை நேமி புரொடக்‌ஷன் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ளார்.

‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய அபிஷாஷ் ஜி.தேவன் இயக்கி உள்ளார். ஜித்தன் ரமேஷ் நாயகனாகவும், அஞ்சு பாண்டியா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஹரிஷ் பெரடி, அருவி மதன், அமர் ராமச்சந்திரன் நடித்துள்ளனர். பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 24ம் தேதி படம் வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் ஔசெப்பச்சன் பேசியதாவது: 45 வருட திரை வாழ்க்கையில் ஒரு தமிழ்ப்படத்திற்கு இசையமைக்கிறேன்.

எனது சினிமா பயணத்தை சென்னையில்தான் துவங்கினேன். கிட்டத்தட்ட 75 சதவீத நாட்கள் இங்கே சென்னையில் தான் இருந்துள்ளேன். இதுவரை பல நூறு படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் தமிழில் ஏன் நீங்கள் இசையமைக்கவில்லை என கேட்கிறார்கள். என்னிடம் பணியாற்றிய வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் தமிழ் சினிமாவில் பிரமாதமாக இசையமைத்துக்கொண்டு இருந்தார்கள். நான் போய் ஏன் அவர்களை கெடுக்க வேண்டும் என்பதற்காக மலையாள திரையுலகிலேயே நின்று விட்டேன் என்றார்.

The post 45 வருடங்களுக்கு பிறகு தமிழில் அறிமுகமாகும் மலையாள இசை அமைப்பாளர் ஔசெப்பச்சன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Auseppachan ,Chennai ,Olaseppachan ,Kollywood Images ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...