×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு

* ஒரு வருடத்தில் 20 ஆண்டுகளுக்கான சாதனை * அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுசென்னை: தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கான சாதனைகளை நிறைவேற்றியுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த  2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜ கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து தனது புதிய அமைச்சரவையை அமைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில்ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருடன் மேலும் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், மக்கள் நலத்திட்டங்களையும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது.திமுக அரசு பதவி ஏற்றவுடன் ‘‘திராவிட மாடல் சிந்தனை’’ யுடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக செயல்பட தொடங்கியது. வாய்ப்புகளும், வளர்ச்சியும் தமிழகம் முழுவதும் சரிசமமாக இருக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாமல் உண்மையான வளர்ச்சியை நோக்கி தமிழகம் பீடு நடை போட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை ரூ.3 அதிரடியாக குறைக்கப்பட்டது. சமூக உரிமையை நிலை நாட்டும் வகையில் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, பட்டியலின மக்களுக்கு சலுகைகள், இல்லம் தேடி கல்வி, மருத்துவம், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு, 5 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச பஸ் பயணம் என்று பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார்.திமுக அரசு பதவி ஏற்ற நாளில் கொரோனா உச்சத்தில் இருந்தது. கொரோனா என்ற அந்த கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினார். இதுவரை தமிழ்நாட்டில் 91 விழுக்காடு பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து 4000 ரூபாய், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.கொரோனா கால நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருட்கள் தரப்பட்டது. பொங்கல் பரிசாக 22 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் யாரும் குறைப்பதற்கு முன்பாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார்.இலங்கையில் இருக்கக்கூடிய நம்முடைய தமிழர்கள் அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, நெசவாளர் கோரிக்கையான பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தள்ளுபடி, 14 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதை தாண்டி, இப்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பள்ளி இடைநின்ற குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கார்கள். பொதுமுடக்கக் கால கற்றல் இழப்பை சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வி’ என்ற சிறப்பான திட்டம்.மருத்துவச் சேவையை மக்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு உன்னதமான திட்டம் தொடங்கப்பட்டது.சாலை விபத்துகளில் சிக்கக்கூடிய, பாதிக்கக்கூடிய விலை மதிப்பற்ற அந்த உயிர்களை காப்பாற்ற – இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 என்ற உன்னதத் திட்டம்.காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி தொகுப்பு 61 கோடி ரூபாய்க்கு வழங்கியதால் உழவர்கள் பெருமகிழ்ச்சி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்னால் கால்வாய்களை முன்கூட்டியே தூர் வாரியது. 4.9 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களை பொறுத்தவரை, அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக ‘நான் முதல்வன்’ என்ற ஒரு உன்னதமான திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ளது. 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, இதன் மூலமாக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இன்றைக்கு உருவாக்கப்பட்டுள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 279 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு – 2,567 கோடி ரூபாய் கோயில் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளின் மேல்படிப்புக்காக மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் 6 லட்சம் மாணவிகள் பயனடைய இருக்கிறார்கள். இவ்வாறு கடந்த ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய சாதனைகளை செய்து சரித்திர சாதனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ளதாக பொதுமக்களும், கல்வியாளர்களும் பாராட்டுகின்றனர்.மாநிலம் முழுவதும் மியாவாக்கி காடுகள்திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். அதை தொடர்ந்து அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் தங்கசாலை பகுதியில் ‘‘அடர்வனம்’’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் காடுகள் (மியாவாக்கி) வளர்க்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து மெரினா மற்றும் பெசன்ட் நகரில் ஓராண்டு சாதனை மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். பின்னர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாலையில், திமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்….

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு appeared first on Dinakaran.

Tags : DMK government ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...