×

ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு திருமணம்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு சென்னையில் நேற்று திருமணம் நடைபெற்றது.ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கும், ஆடியோ இன்ஜியரான ரியாசுதீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், இவர்களின் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். எளிமையான முறையில் திருமண விழா நடந்தது.திருமண நிகழ்ச்சிக்கு பின் மகள், மருமகன் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் எனவும், அனைவரது அன்பிற்கும் முன்கூட்டியே நன்றி எனவும் குறிப்பிட்டார்….

The post ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு திருமணம் appeared first on Dinakaran.

Tags : PA ,R.R. ,Rahman ,Chennai ,A. R.R. Rahman ,R.R. Rahman ,Kadija Rahman ,Ryasuddin ,A. R.R. ,
× RELATED இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்...