×

சாகர்மாலாவில் அதிரடி 6.5 லட்சம் கோடியில் 1,637 மேம்பாட்டு திட்டம்

புதுடெல்லி: துறைமுக மேம்பாட்டிற்காக 1,537 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசின் ‘சாகர்மாலா திட்டம்’, நாட்டில் 7500 கிமீ நீளமுள்ள கடற்கரைகளையும், 14 ஆயிரத்து 500 கிமீ நீர் வழித்தடங்களை பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாக கொண்டது. இதன்படி, ஏற்கனவே பல்வேறு நதிகளில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று, ‘தேசிய சாகர்மலா உயர்குழு’ கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த ஒன்றிய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், ”துறைமுகங்களை மேம்படுத்தும் சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக  1,537 பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பணிகள் ரூ.6.5 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 75 கடலோர மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகின்றது,” என்றார்….

The post சாகர்மாலாவில் அதிரடி 6.5 லட்சம் கோடியில் 1,637 மேம்பாட்டு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Sagarmala ,New Delhi ,Union Minister ,Sarbananda Sonowal ,Union government ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு