×

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் குட்டியுடன் திரியும் ஒற்றையானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் குட்டியுடன் ஒற்றை யானை சுற்றிவருகிறது. இந்த யானை ராமாபுரம், அம்பலட்டி, கோபசந்திரம், பீர்ஜேபள்ளி, சானமாவு உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் கிராம பகுதிக்கு வரும் யானை, பொழுது புலர்ந்ததும் வனப்பகுதிக்கு செல்லாமல் நீண்ட நேரமாக ஊருக்குள்ளேயே சுற்றி வருவதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த யானை ஓசூர்-ராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையையும், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுங்சாலையையும் அடிக்கடி கடப்பதால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, மெதுவாக செல்ல வேண்டும். மேலும், வனத்தையொட்டியுள்ள கிராமப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்லும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்….

The post ஓசூர் சானமாவு வனப்பகுதியில் குட்டியுடன் திரியும் ஒற்றையானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Osur ,Sanamavu ,Sanamavu forests ,Krishnagiri District ,Ramapuram ,Chanamau ,Dinakaran ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்