×

பிறந்த நாளில் அறிவிப்பு ரஜினி படத்தின் தலைப்பு

சென்னை: ரஜினிகாந்துக்கு நேற்று 73 வயது முடிந்து, 74 வயது துவங்கியது. இதையொட்டி அவரது 170வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ‘வேட்டையன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஜெய் பீம் படத்துக்கு பிறகு த.செ.ஞானவேல் எழுதி, இயக்குகிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும் அமிதாப் பச்சன் வக்கீலாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு கமல்ஹாசன், ஆமிர்கான், ஷாருக்கான், சிரஞ்சீவி, மோகன்லால் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக நடித்து வரும் ரஜினியை பார்க்க அவரது வீடு முன்பு ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பில் இருந்ததால் ரஜினியை அவர்கள் பார்க்க முடியவில்லை.

 

The post பிறந்த நாளில் அறிவிப்பு ரஜினி படத்தின் தலைப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajini ,Chennai ,Rajinikanth ,Amitabh Bachchan ,Lyca ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்