×

பாஜ மாஜி மாநில நிர்வாகி கே.டி.ராகவன் மீது யாரும் பாலியல் புகார் அளிக்கவில்லை: அண்ணாமலை பேட்டி

சென்னை: சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நான்கு நாட்கள் இலங்கை தீவுக்கு பயணம் மேற்கொண்டேன். மேலும் மே 1ம் தேதி நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றேன். இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு ஒன்றிய அரசு சார்பில்  4 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டது. இன்னும் 10 ஆயிரம் வீடுகள் கூடுதலாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது ஒன்றிய அரசால் கட்டித்தரப்பட்டுள்ளது.இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதன் காரணமாக  1.5 பில்லியன் டாலர் இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது. தருமபுரம்  ஆதீனம் பட்டினப்பிரவேசம் விவகாரத்தில் அரசியல் உள் நோக்கம் உள்ளது. குரு என்பவர் கடவுளுக்கு சமமானவர் எனவே அவரை தூக்குவது தவறு இல்லை. பாஜ நிர்வாகியாக இருந்த கே.டி. ராகவன் மீது பாலியல் விவகாரம் தொடர்பாக பாஜ சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டியிடம் இது வரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்….

The post பாஜ மாஜி மாநில நிர்வாகி கே.டி.ராகவன் மீது யாரும் பாலியல் புகார் அளிக்கவில்லை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,KT Raghavan ,Annamalai ,Chennai ,president ,Kamalalayam ,Tamil Nadu ,
× RELATED அண்ணாமலை பேச்சு… வீணாப்போச்சு… தலையில் அடித்துக்கொண்ட கட்சியினர்