×

காஞ்சி சங்கர கலை கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஸ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஒரு ஆண்டு சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை, கடந்த வருடம் துவங்கியது. பயிற்சி வகுப்பில் சிங்கப்பூர், இலங்கை, கனடா மற்றும் இந்தியா முழுவதும் இருந்து 129 பேர் ஆன்லைன் மூலம், பயிற்சி பெற்றனர். ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டாலும் தமிழகத்தில் இருந்து படித்த அனைவரும் நேரடி சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டனர். இதில் 40 நாட்கள் சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துவித சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன.பயிற்சி வகுப்பின் நிறைவு விழா கல்லூரி கூட்டரங்கில், கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடாதிபதி ஸ்ரீ தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டு பேசுகையில், சைவ சித்தாந்த நெறி என்பது வாழ்க்கைக்கு மிக அவசியமானது. இதைக் கற்று அதன்படி நடந்து கொண்டால் அனைத்தும் இன்பமே என்றார்.நிகழ்ச்சியில், பேராசிரியர் விஜயராகவன் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post காஞ்சி சங்கர கலை கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Saiva Siddhanta ,Kanji Sankara College of Arts ,Kanchipuram ,Sri Sankara College of Arts and Sciences ,University of Chennai ,Kanchi Shankara Arts College ,Dinakaran ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...