×

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும் 3 இடங்களில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது: n மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் n அடுத்த 3 நாள் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: கத்திரி வெயில் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில்  தமிழகத்தில் 111 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து, 4ம் தேதி முதல் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது. இது 25 நாட்கள் நீடிக்கும். அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு  தமிழகத்தில் பரவலாக இயல்பை விட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி  திருத்தணி, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் நேற்று 111 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், திருச்சி, கரூர்,ம துரை பகுதிகளில் 108 டிகிரி இருந்தது. ஈரோடு, சென்னை 106 டிகிரி, தர்மபுரி, சேலம், கடலூர் 104 டிகிரி வெயில் இருந்தது. அதேபோல ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  அதனால் அடுத்த இரண்டு நாட்களில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை தமிழகத்தில்  இயல்பைவிட  வெயில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் 4ம் தேதி முதல் கத்திரி வெயில் காலமும் தொடங்குவதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தில் 113 டிகிரி வரை கத்திரி காலத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. அதே நிலை 2016, 2017ம் ஆண்டுகளில் நிலவியது. வேலூரில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2021வரை குறைந்த பட்சம்  108 டிகிரி முதல் அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயில் நிலவியது. மதுரையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை குறைந்த பட்சமாக 104 டிகிரி முதல் அதிகபட்சம் 110 டிகிரி வரை வெயில் நிலவியது. திருச்சியில் 2012 முதல் 2021வரை குறைந்த பட்சம் 108 டிகிரி முதல் அதிகபட்சம் 110 டிகிரி வரை வெயில் நிலவியது. சேலத்தில் கடந்த 2012 முதல் 2021 வரை குறைந்த பட்சம் 104 டிகிரி முதல் அதிகபட்சம் 110 டிகிரி வரை வெயில் நிலவியது. மேற்கண்ட நிலவரப்படி தற்போது  தமிழகத்தில் வெ யிலின்  தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு மே மாதம் 113 டிகிரியை  தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே உச்சி வெயில் நேரத்தில் வெளியே வர வேண்டாம என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்பத்தை தணிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகளை அதிக அளவில் அருந்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரத்த கொதிப்பு, நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு சன் ஸ்ட்ரோக் என்னும் மூளை தாக்க நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்….

The post தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும் 3 இடங்களில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது: n மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் n அடுத்த 3 நாள் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...