×

ஆலங்குடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு

ஆலங்குடி: ஆலங்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை பத்திரமாக மீட்கப்பட்டது.ஆலங்குடி அருகே உள்ள மேலப்பட்டி ரசியமங்கலம் பகுதியை சேர்ந்த நேரு என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கும்மங்குளம் பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்தது. இந்நிலையில் இது குறித்து ஆலங்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி ஜல்லிக்கட்டு காளையை கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்….

The post ஆலங்குடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Alangudi ,Melapatti Rasiyamangalam ,Dinakaran ,
× RELATED ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு;...