- விஜய் சேதுபதி
- சென்னை
- அனல் கோவ்சா
- வீஹான்
- ராஜலட்சுமி அரசகுமார்
- பிரேவ்மேன் படங்கள்
- சூர்யா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு முதல்முறையாக எழுதி இயக்கும் படத்துக்கு ‘பீனிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டேக் லைனாக ‘வீழான்’ என்ற வாசகம் இடம்பெறுகிறது. பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலட்சுமி அரசகுமார் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருடன் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், வர்ஷா, அபி நக்ஷத்ரா, என்.ஜே.சத்யா, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன், ‘அட்டு’ ரிஷி, பூவையார் நடிக்கின்றனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். விளையாட்டு பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது. இதற்கு முன்பு சில படங்களில் சூர்யா சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
The post ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.