×

துணை ராணுவ தளபதி பி.எஸ்.ராஜூ நியமனம்

புதுடெல்லி: ராணுவ துணை தளபதியாக லெப்.ஜெனரல் பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.ராணுவ தளபதியாக ஜெனரல்  மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். இவரது  பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த  தளபதியாக மனோஜ் பாண்டேயை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அவர் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், ராணுவ துணை தளபதியாக லெப்.ஜெனரல் பிஎஸ். ராஜூவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.  கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கடந்த  1984ம் ஆண்டு ராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 38 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி உள்ள ராஜூ,  ஆபரேஷன் பராக்கிராம், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி உள்ளார்.  தற்போது டெல்லி ராணுவ தலைமையகத்தில் ராணுவ நடவடிக்கையின் இயக்குனர் ஜெனரலாக உள்ள  ராஜூ,  நாளை தனது புதிய பொறுப்பை ஏற்பார் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன….

The post துணை ராணுவ தளபதி பி.எஸ்.ராஜூ நியமனம் appeared first on Dinakaran.

Tags : Deputy Military Commander ,B. S.S. Raju ,New Delhi ,Deputy Commander ,Lt. General B. S.S. ,Raju ,General ,Manoj Mukund Naravane ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு