×

திருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய விற்பனை படுஜோர்

* சாலைகளில் சிதறிக் கிடக்கும் காலி கவர்கள்* நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைதிருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதிகளில் அதிக அளவில் கள்ளச்சாராயம் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் அதிரடி வேட்டை நடத்தி மாவட்டத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத நிலைமை கொண்டு வர நாள்தோறும் சாராய வேட்டைகளில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் பகுதியில் உள்ள லக்கி நாயக்கன் பட்டி கிராமம் மற்றும் குனிச்சி பகுதிகளில் அதிக அளவில் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டு சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்து குடிமகன்கள் குடித்துவிட்டு காலி கவர்களை குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரம் வீசி சென்று வருகின்றனர். இந்த சாராய பாக்கெட்டுகளை முழுவதும் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே சாலை மற்றும் தெருக்களில் குவிந்து வருகிறது. இங்குள்ள பள்ளி அருகே இந்த சாராய காலி கவர்கள் வீசப்பட்டு உள்ளதால் இந்த வழியாக செல்லும் மாணவ மாணவிகள் அங்கு உள்ள சாராய பாக்கெட்டுகளை பார்த்து முகம் சுளித்து செல்கின்றனர். எனவே கிராமப் பகுதிகளில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்ட எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கந்திலி காவல் துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post திருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Tags : Padujor ,Tirupathur ,Kandili ,
× RELATED தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு..!!