×

மீண்டும் சீட் தரலைன்னா தாவி விடுவேன்!

கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்ற கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார், அ.தி.மு.க. இரண்டாக உடைந்தபோது ஓ.பி.எஸ். ஆதரவாளராக மாறினார். இத்தொகுதியில், மருதமலை, வடவள்ளி, முல்லை நகர், சீரநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பகுதிகள் இருக்கிறது. மலை கிராமங்களில் யானைகள், காட்டு பன்றிகள் ஊடுருவலை தடுக்க இவர் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் சீரமைப்பு பணி பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் இவர் கண்டுக்கவே இல்லை. படிக்கட்டு சீரமைப்பு, ரோப் கார் திட்டம் போன்ற வசதிகளை செய்து தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு சட்டக்கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வனக்கல்லூரி மேம்பாட்டிற்காக எதுவும் செய்யவில்லை. சங்கனூர் பள்ளம் சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய்க்கு போட்ட திட்டம் அப்படியே முடங்கி கிடக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் பல இடங்களில் சாக்கடை கால்வாய், மழை நீர் வடிகால், மாடல் ரோடு பணிக்காக தோண்டிய குழிகள் மூடப்படவில்லை. ரத்தினபுரி, கண்ணப்ப நகர் உள்ளிட்ட ஏரியாவில் 60 குடிசை பகுதிகளின் மேம்பாட்டிற்காக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. 5 ஆண்டிற்கு முன் இதையெல்லாமல் செய்வேன் என ஓட்டுக்கேட்ட இவர், அப்படியா… சொன்னேனா… என்கிறார். இவர் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தனக்கு மீண்டும் சீட் பிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஒருவேளை, வடக்கு தொகுதியில சீட் தரலைன்னா, கவுண்டம்பாளையத்துக்கு தாவிவிட வேண்டியதுதான்.. என கணக்கு போட்டு வருகிறார். * பேசாத அதிமுக எம்எல்ஏவால் மோசமாகிப்போன தொகுதி: சாலை, பூங்காக்கள் அமைத்திருக்கிறேன்மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் நீதிபதி, திமுக சார்பில் இளமகிழன் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளர் நீதிபதி, வாக்காளர்களை கவர வாக்குறுதிகளை சரம் சரமாக வீசினார். ஆனால், ஒன்றைக்கூட நிறைவேற்றாதது, உசிலம்பட்டி தொகுதி மக்களை குறிப்பாக விவசாயிகளை ஆத்திரத்திற்கு ஆளாக்கியுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் 58 கிராம மக்கள் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில் துவங்கப்பட்ட 58 கிராமக்கால்வாய் திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் மந்தமாக நடந்து வந்தது. எம்எல்ஏ என்கிற முறையில் இதற்காக தமிழக அரசிடம் வலியுறுத்தவோ, பயன்பாட்டுக்கு வந்த பின் சட்டமன்ற கூட்டத்தில் பேசி, தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்க வேண்டும் என்றோ ஒருமுறை கூட கேட்டதில்லை. இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் திறக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.உசிலம்பட்டியில் தொழிற்சாலை, நெரிசல் தீர்க்க புறவழிச்சாலை, பாதாளச்சாக்கடை திட்டம் ஆகியவை கொண்டு வருவதாக சொன்னார். இதுவரை நடவடிக்கை இல்லை. சேடபட்டியில் சிப்காட் மையம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர் காலத்தில் கைரேகைச்சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு பென்ஷன் வழங்குவதோடு, இதற்கான விழாவை அரசு விழாவாக மாற்றுவேன் என்றார். இது எதுவுமே நடக்கவில்லை. செல்லம்பட்டியில் பூ மகசூல் அதிகம் இருப்பதால் சென்ட் பேக்டரி அமைப்பேன். உசிலம்பட்டியில் இயங்க வேண்டிய கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலம், தற்போது திருமங்கலத்தில் இயங்கி வருவதை உள்ளூருக்கு கொண்டு வருவேன்.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான வாழைத்தோப்பு பகுதியின் அருகே டேராபாறை அணைத்திட்டம், எம்.கல்லுப்பட்டியில் அய்யனார் அணையை விரிவுப்படுத்தும் திட்டம், சாப்டூர் – சந்தையூர் இணைப்புச்சாலை, மல்லப்புரம் – மயிலாடும்பாறை இணைப்புச்சாலை அமைப்பேன் என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் அள்ளிக்கொட்டி, வாக்காளர்களை அசர வைத்த எம்எல்ஏ நீதிபதி, ஓட்டுக்காக சொன்ன அத்தனையையும் ஓட்டு வாங்கியதும் காற்றில் பறக்க விட்டு விட்டார். ‘‘தொகுதிக்காக எதையுமே சட்டசபையில் பேசியதில்லை. தொகுதி மிக மோசமாகிவிட்டது’’ என உசிலம்பட்டி தொகுதி மக்கள் புலம்புகின்றனர்.* வீட்டிற்குள் பூட்டி வைத்து தம்பதியை தாக்கிய எம்எல்ஏ2016 தேர்தல் திமுக வேட்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான இளமகிழன் கூறும்போது, ‘‘கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே காப்பாற்றாததால், உசிலம்பட்டி தொகுதி பொதுமக்களும், விவசாயிகளும் ஆத்திரத்தில் உள்ளனர். விழிப்புணர்வு பெற்று உரிமைக்காக போராடவும், எதிர்த்து கேள்வி கேட்கவும் துணிந்து விட்டனர். இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி இனி அதிமுக இங்கே ஓட்டு கேட்கமுடியாது. உசிலம்பட்டி அருகே தன்னிடம் எலக்ட்ரீஷியனாக பணியாற்றியவரிடம் சூட்கேசில் பணம் கொடுத்து விட்டு, ரூ.48 லட்சம் குறைந்து விட்டது என அந்த தம்பதியினரை விடிய, விடிய, வீட்டிற்குள் பூட்டி வைத்து தாக்கியதாக எம்எல்ஏ மீது எழுந்த குற்றச்சாட்டுகளையும் தொகுதி மக்கள் மறக்கவில்லை. தொகுதிக்கென எந்த திட்டங்களுமே செயல்படுத்தாத நிலையில், வரும் தேர்தலில் அதிமுகவை தூக்கி எறிய தொகுதி மக்கள் தயாராகி விட்டனர்’’ என்றார்.* சாலை, பூங்காக்கள் அமைத்திருக்கிறேன்உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி கூறும்போது, ‘‘உசிலம்பட்டி நகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தை ரூ.1.50 கோடியில் நிறைவேற்றியுள்ளேன். பெருங்காமநல்லூர் வீர தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். ரூ.14 கோடி மதிப்பில் உத்தப்பநாயக்கனூர் அரசு பாலிடெக்னிக்கில் கூடுதல் கட்டிடம், லேப் கட்டித் தரப்பட்டுள்ளது. இங்கேயே நிழற்குடை, தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சேடபட்டியில் ரூ.1.25 கோடி மதிப்பில் பூங்கா, உசிலம்பட்டி, செல்லம்பட்டி சமத்துவபுரங்களிலும், திடியனினும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ₹8 கோடியில் உள்நோயாளிகளுக்கான குளிர்சாதன அறைகள் கட்டப்பட்டு வருகிறது. பல இடங்களில் பேவர்பிளாக் சாலை, பயணிகள் நிழற்குடை, சமுதாயக்கூடம் போன்றவை கட்டிகொடுத்து இருக்கிறேன்’’ என்கிறார்….

The post மீண்டும் சீட் தரலைன்னா தாவி விடுவேன்! appeared first on Dinakaran.

Tags : Coimbatore North Constituency MLA ,PRG Arunkumar ,A.D.M.K. ,Dinakaran ,
× RELATED எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்...