×

வானதி சீனிவாசன் பேச்சு மது குடித்துவிட்டு வீடு திரும்புபவருக்கு வாகன ஏற்பாடு

சென்னை: பேரவையில் கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ): பஞ்சு விலை உயர்வால் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மு.அப்பாவு: ரூ.38 ஆயிரமாக இருந்த பஞ்சு ஒரு பேல், ரூ.1 லட்சமாக உயர்ந்துள்ளது. (அமைச்சர்களை போன்று விரிவான விளக்கம் அளித்து சபாநாயகர் பேசியதை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ரசித்தனர்)வானதி சீனிவாசன்: தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும். மதுவை அரசே விற்பனை செய்கிறது. அருகில், குடிப்பதற்கு வசதியாக பார் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, மது குடித்துவிட்டு வீடு திரும்புபவர்களுக்கு வசதியாக வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை பெற்றுத் தாருங்கள் என்று சொன்னீர்கள். ஒன்றிய அரசிடம் போய் சொன்னால், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்ற பட்டியலை வழங்குமாறு கேட்கிறார்கள். எனவே, அந்த பட்டியலைத் தந்தால் நன்றாக இருக்கும். சபாநாயகர் அப்பாவு: ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதியை பெற்றுத் தருவேன் என்று உறுதி அளித்தால், அதற்கான பட்டியலை தரச் சொல்கிறேன்….

The post வானதி சீனிவாசன் பேச்சு மது குடித்துவிட்டு வீடு திரும்புபவருக்கு வாகன ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Vanadhi Sinivasan ,Goa South ,Vanati Sinivasan ,Baja ,Br ,Vandi Sinivasan ,Dinakaraan ,
× RELATED அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு: வானதி சீனிவாசன் விளக்கம்