×

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு தூக்கு: தாயின் 12 ஆண்டு போராட்டம் வீண்

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதால் அவரது மரண தண்டனை உறுதியாகி உள்ளது. அவருடைய தூக்கு இன்று நிறைவேற்றப்படுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு கைதானார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மலேசிய போதைப் பொருட்கள் கடத்தல் சட்டத்தின் கீழ் 15 கிராமுக்கு கூடுதலாக போதைப்பொருள் எடுத்து செல்வது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு அங்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தர்மலிங்கம் கைதான போது அவரிடம் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. இந்நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் கடந்த 2011ம் ஆண்டு மேல்முறையீடு செய்த போது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கடந்தாண்டு நவம்பர் 10, தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. இச்செய்தி சமூக வலைதளங்களில் பரவியதால், அவரை தூக்கிலிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தர்மலிங்கத்தின் இறுதி மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவருக்கு 27ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்தி வெளியானது. ஏறக்குறைய 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நாகேந்திரனின் தூக்கு தண்டனை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது குடும்பத்தினரின் கடைசி நம்பிக்கை பொய்த்துப் போன நிலையில், நாகேந்திரினின் தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்படுகிறது….

The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு தூக்கு: தாயின் 12 ஆண்டு போராட்டம் வீண் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Nagendran Dharmalingam ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...