×

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல் … உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு!!

சென்னை : தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நேற்று 94வது அப்பர் குருபூஜையை முன்னிட்டு நேற்று இரவு சப்பரம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.அப்போது பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் தஞ்சை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். அத்துடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிக்கவும் உள்ளார்.அத்துடன் தேர் திருவிழா விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே தஞ்சை களிமேடு தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார். …

The post தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல் … உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Thanjai Clamedu Cheru Festival ,PM Modi ,Chennai ,Thanjai Kramedu Cheru festival ,Clamedu ,Thanjavur ,Manjai Clamedu Cheru Festival Accident ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...