×

தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை: விசில் அடித்து காட்டிற்குள் விரட்டினர்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அதில் ஒரு ஒற்றை யானை தனியாக சுற்றி வருகிறது. இந்த ஒற்றை யானை அவ்வப்போது கிராம பகுதிகளில் நுழைந்து பயிர்களை நாசம் செய்து மீண்டும் காட்டிற்குள் சென்றுவிடும். இந்நிலையில் நேற்று காலை குந்தக்கோட்டை கிராமம் அருகேயுள்ள சாலையோரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். பின்னார் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த யானையை கிராம மக்கள் விசில் அடித்தும் சத்தம் போட்டும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒற்றை யானை குந்துக்கோட்டை- அஞ்செட்டி சாலையை கடந்து சென்றது. யானை சாலையோரம் நின்றுகொண்டிருந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அந்த பகுதியை கடக்காமல் அங்கு நின்று கொண்டிருந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து சாலையை கடந்து அந்த பகுதியில் உள்ள காட்டிற்குள் சென்ற ஒற்றை யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சாலையை கடந்து சென்ற ஒற்றை யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. …

The post தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை: விசில் அடித்து காட்டிற்குள் விரட்டினர் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Krishnagiri district.… ,Dinakaran ,
× RELATED ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே...