×

இளையராஜா பயோபிக்கில் தனுஷ்

சென்னை: இந்திய சினிமாவின் இசையில் தவிர்க்க முடியாத ஆளுமை இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் அதில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என கூறப்படுகிறது.

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தென்னிந்திய திரைத்துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் அடுத்தடுத்து உருவாக இருக்கும் பல மெகா பட்ஜெட் படங்களின் வரிசையை அறிவிப்பதில் பெருமையடைகிறோம். மெர்குரி க்ரூப் இந்தியா, தென்னிந்திய பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொட்னு கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்பு பிரிவாக இங்கு செயல்பட இருக்கிறது.

புதிய ஸ்ட்ரீமிங் கதைகள், ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய ஜானர் கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும். சிறந்த வணிகத்துடன் ஆரோக்கியமான பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பையும் ஆராயும். இந்த கூட்டணி முதல் திரைப்படமாக தென்னிந்திய திரையுலகில் மாபெரும் சாதனையாளரான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி 2025ம் ஆண்டு படம் வெளியிட திட்டமிடப்படிருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

The post இளையராஜா பயோபிக்கில் தனுஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhanush ,Chennai ,Ilayaraja ,Neinga ,Ilairaja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக...