×

நாளை நமதே படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்த தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மரணம்

திருமலை: பழம்பெரும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் (82). இவர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாமிடிமுக்காவில் கடந்த 1945ம் ஆண்டு மல்லம்பள்ளி கிராமத்தில் பிறந்தார். இவர் கடந்த 55 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தார். மொத்தம் 932 படங்களில் நடித்துள்ளார். கடந்த 1987ல் சந்தமாமா ராவே படத்திற்கு நந்தி விருது பெற்றார். அதானொக்கடே (2005) படத்தில் துணை நடிகருக்கான நந்தி விருது, அதன்பின்னர் பிலிம்பேர் என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

சிறந்த குணச்சித்திர கலைஞராக போற்றப்படும் இவர், ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நாளை நமதே படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடித்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறப்புக்கு தெலுங்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மனைவி ஜலந்தர் ஒரு எழுத்தாளர். இவர்களுக்கு மீனாட்சி, மாதவி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் மீனாட்சி உளவியலாளராக அமெரிக்காவிலும், 2வது மகள் மாதவி சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகின்றனர்.

The post நாளை நமதே படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்த தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chandramohan ,MGR ,Mallampalli village ,Bamidimuka, Krishna district ,AP ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது