×

கைம்பெண்ணுக்கு திருமண டார்ச்சர் சினிமா தயாரிப்பாளர் வாராகி கைது: வடபழனி மகளிர் போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சுஜிதா(31). இவர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் 4 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்தபோது, சினிமா தயாரிப்பாளரான வாராகி சில உதவிகளை செய்தார். மேலும், அவர் நடத்தும் அலுவலகத்தில் 2016 முதல் 2017 வரை பணியாற்றினேன். அப்போதே, வாராகி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்ததால் நான் வேலையில் இருந்து நின்றேன்.வாராகிக்கு முதல் மனைவி நீலிமா மற்றும் 2வது மனைவி ஆஷா ஆகியோர் இருக்கும் நிலையில் 3வதாக அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேரிலும், தொலைபேசியிலும் எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதற்கிடையே கடந்த 24ம் தேதி 12.40 மணிக்கு எனது வீட்டுக்கு வந்து காலிங்பெல்லை அடித்து தொந்தரவு செய்தார். அதற்கு நான் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே வர முயன்றார். பிறகு கதவு மற்றும் காலிங்பெல்லை சேதப்படுத்திவிட்டு சென்றார். இதனால் வாராகியிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் வாராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.எனவே சுஜிதா அளித்த புகாரின்படி வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சினிமா தயாரிப்பாளர் வாராகி மீதான குற்றச்சாட்டு உறுதியானது.மேலும், வாராகி மீது சேலையூர் உட்பட 4 காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து, வாராகி மீது ஐபிசி 294(பி), 427, 448, 506(1), 511 மற்றும்  பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்….

The post கைம்பெண்ணுக்கு திருமண டார்ச்சர் சினிமா தயாரிப்பாளர் வாராகி கைது: வடபழனி மகளிர் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Waragi ,Chennai ,Sujita ,Virugampaakkam Natesan Nagar ,Vadapalani All Women's Guild ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...