×

அமைச்சர் எ.வ.வேலு தகவல் கோவையில் 3 கட்டங்களாக புறவழிச்சாலை அமைக்கும் பணி

சட்டப்பேரவையில் ேகள்வி நேரத்தின் போது எஸ்.பி.வேலு மணி(அதிமுக) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: கோவை மாவட்டத்தின் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிக்காக 3 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட பணிகள் முடிந்ததும்  250 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கத் திட்டம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தயார் செய்யப்பட்ட பின் சாலை அமைக்கும் பணி நடைபெறும். இரண்டாவது கட்ட பணி 70 சதவிதமும், 3வது கட்டமாக 50% பணி நில எடுப்பும் நடைபெற்றுள்ளது. நிலம் எடுக்கும் பணிகளை விரைவு படுத்தி 3 கட்டங்களாக சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.மற்றொரு உறுப்பினர் கேள்விக்கு, பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், நாமக்கல்- பரமத்தி வேலூர் இருவழிச்சாலையை, 4 வழிசாலையாக மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் புறவழிச்சாலை திட்டப்பணிகளுக்கு 142 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட வருகிறது. நாமக்கல் புறவழிச்சாலைக்காக ₹87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post அமைச்சர் எ.வ.வேலு தகவல் கோவையில் 3 கட்டங்களாக புறவழிச்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Minister A. Etb ,Vale information temple ,Velu Mani ,Velu ,Western subway ,Govai District ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூர் துறைமுகத்தில் சரக்குப்...