×

ரூ.25 கோடி செலவில் கரிம மாசு இல்லாத பகுதியாக கோயம்பேடு சந்தை மாற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை:  தமிழக சட்டசபையில் நேற்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அத்துறையின் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: முதல்வரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. பள்ளியின் அனைத்து மின்தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும். மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தி, அடிமட்ட அளவுக்கு கொண்டு செல்வதற்காக மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியில் இருந்து ₹13 கோடி செலவில் செயல்படுத்தப்படும். 2 புதிய ஆய்வகங்கள் ஒரகடம் மற்றும் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியில் இருந்து ₹6 கோடி செலவில் உருவாக்கப்படும்.ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகங்களின் ஒன்றான கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குவதற்காக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இது ₹25 கோடி செலவில் செயல்படுத்தும். அரசு மஞ்சப்பை விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ₹10 லட்சமும், 2வது பரிசாக ₹5 லட்சமும், 3வது பரிசாக ₹3 லட்சமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ₹54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். …

The post ரூ.25 கோடி செலவில் கரிம மாசு இல்லாத பகுதியாக கோயம்பேடு சந்தை மாற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbude ,Chennai ,Tamil Nadu Assembly ,Minister ,Shiva ,W.V. Maiyanathan ,Dinakaran ,
× RELATED ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக...